ஜனவரி 18, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg, Mascow): கடந்த 2022ல் பிப்ரவரி மாதம் ரஷிய படைகள் (Russia Ukraine War) உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து செல்கிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) அறிவிப்பு வெளியிட்டு உலக நாடுகளை அதிரவைத்தார். ரஷியாவுக்கு எதிராக செயல்பட்டு ஐரோப்பிய யூனியனின் நேட்டோ (NATO Forces) படைகளோடு இணையும் திட்டத்துடன் இருந்த உக்ரைன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Ukraine President Jelensky) தலைமையிலான நிர்வாகம் நேட்டோவோடு இணைய எடுத்த முயற்சிகள் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்தது. மேலும், எதிர்காலத்தில் நேட்டோ படைகள் உக்ரைனில் இராணுவ மையங்களை விரிவுபடுத்தி, ஒருகட்டத்தில் ரஷியா மீது போர்தொடுத்தால் அது பெரும் பிரச்சனையாக அமையும் என்பதை உணர்ந்து, ரஷியா உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. Shubman Gill Double Century: இமாலய இலக்கை பெற அடித்து நொறுக்கி சிங்கமாய் கர்ஜித்த ஷுப்னம் ஹில்.. இரட்டை சதமடித்து புதிய சாதனை.!
முதலில் பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பின்னாளில் தனது முழு இராணுவ பலத்தையும் உக்ரைனுக்கு எதிராக நிலைநிறுத்தி போர்தொடுத்து சென்றார். உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் (America, England & Their Friend Countries) ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வந்தன.
இந்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "உக்ரைன் மண்ணில் ரஷியா வெற்றியடைந்துவிட்டது. அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இராணுவ ரீதியாக பல தோல்விகள் இருந்தபோதிலும் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ரஷிய மக்களுடைய ஒற்றுமை, நமது போராளிகளின் தைரியம், வீரம், இராணுவ தொழித்துறை பணிகள் வெற்றியை உறுதி செய்யும்" என தெரிவித்தார்.