3 Year Old Boy | Crime File Pic (Photo Credit: @SachinGuptaUP X)

ஜூலை 14, பிஜினோர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜினோர், சந்த்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி தரன்னம். இவரின் மகன் அர்ச்லன் (வயது 3). கடந்த ஜூலை 12ம் தேதி சிறுவன் தனது வீட்டின் வெளியே இருந்த நிலையில், காலை 11 மணியளவில் திடீரென மாயமாகி இருக்கிறார். இதனால் அவரை காணாது தேடி அலைந்த குடும்பத்தினர், மகனை கண்டறிய இயலாமல் பதறிப்போயினர்.

பக்கத்து வீட்டு பெண் மீது சந்தேகம்:

இதனையடுத்து, சந்த்பூர் காவல் நிலையத்தில் மகன் மாயமானது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறைனர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். சிறுவன் எங்கு சென்றார் என்ற விபரம் கிடைக்காத நிலையில், சிறுவனின் குடும்பத்தினர் தங்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ரோஷன் என்பவரின் மீது புகார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். Juvenile Heart Attack: இளவயதில் ஏற்படும் மாரடைப்புகளை சரிசெய்வது எப்படி?.. இளம் தலைமுறையே தெரிஞ்சிக்கோங்க.! 

குழந்தையின் உடல் மீட்பு:

இதனால் காவல் துறையினர் ரோஷன் என்ற பெண்ணை கைது செய்து நடத்திய விசாரணையில், தான் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், குழந்தையின் உடலை அங்குள்ள குளத்தில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் குழந்தையின் உடலை நேற்று மீட்டனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:

கொலைக் குற்றவாளியான பெண்மணி ரோஷன் - குழந்தையின் தாய் தரன்னத் ஆகியோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் முன்விரோதம் காரணமாக, 3 வயது பச்சிளம் பிஞ்சை கொலை செய்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாகவும் ரோஷன் வாக்குமூலம் அளித்து அதிரவைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.