Oscars 2025 (Photo Credit: Oscars.org)

மார்ச் 01, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், ஓவடியன் ஹாலிவுட், டால்பி திரையரங்கில், 97 வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச அளவில் வெளியாகிய பல்வேறு திரைப்படங்களில் சிறந்த பணிகளுக்கான படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்நிகழ்ச்சியை அமெரிக்க திரைப்பட நடிகர் கேனன் ஓ பிரையன் (Conan O'Brien) தொகுத்து வழங்குகிறார். 23 வகை பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகள், உலகளவில் கவனிக்கப்படும் என்பதால், அகாடமி விருதுகள் 2025 முக்கியத்துவம் பெற்றுள்ளது. DQ 40 I'M GAME: துல்கர் சல்மானின் 40 வது திரைப்படத்திற்கு ஐ'ம் கேம் என பெயர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

விருதுகள் வழங்கும் நிகழ்வு எப்போது? நேரலை பார்ப்பது எப்படி (Where to Watch Oscars 2025 Acedamy Awards Live)?

அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 02 மார்ச் 2025 அன்று ஒளிபரப்பு செய்யப்படும் ஆஸ்கர்ஸ் அகாடமி விருதுகள் (The Oscars Academy Awards 2025), இந்தியாவில் மார்ச் 03, 2025 திங்கள்கிழமை அதிகாலை 05:00 மணிக்கு மேல் தொடங்கும். 23 பிரிவுகளில் அடுத்தடுத்து என 1 மணிநேரத்திற்குள் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆஸ்கர் விருதுகளை நேரலையில் பார்க்க விரும்பும் இந்தியர்கள், மார்ச் 03 அன்று அதிகாலை கீழுள்ள இணைப்புகளை சோதித்தால், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவை தவிர்த்து ஆஸ்கர் விருதுகளை தொலைக்காட்சியில் ஸ்டார் மூவிஸ் (Star Movies), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி பக்கத்திலும் நேரலையில் பார்க்கலாம்.

ஆஸ்கர் விருதுகள் நேரலை வீடியோ (Oscars 2025 Live Video):

ஆஸ்கர் விருதுகள் நேரலை வீடியோ 2: