ஜூலை 15, கலிபோர்னியா (World News): சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் ஆய்வுக்காக சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று (ஜூலை 15) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கினார். 28 மணிநேரம் விண்வெளியில் இருந்து தொடர் பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு பத்திரமாக தரையிறங்கி அமெரிக்க கடற்படை துறையினரால் விண்கலத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்டுள்ளனர். Shubhanshu Shukla: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா.. நாளை மதியம் வந்தடைவார் என தகவல்..!

விண்வெளி நிலைய பயணம் :

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ஆக்சியம்-4 திட்டத்தின் (Axiom-4 Mission)கீழ் ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி அமெரிக்காவின் மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் கடந்து ஜூன் மாதம் 25ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட்டில் பூமியிலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி மையம் சென்ற இரண்டாவது இந்தியர் :

இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். கடந்த 18 நாட்களாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியை செய்தவர்கள், தற்போது பூமிக்கு நலமுடன் திரும்பி இருக்கின்றனர். இதன் மூலமாக சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைகிறார். தொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை அனைத்தையும் நிறைவு செய்த பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி வந்தடைந்தார் சுபான்ஷு சுக்லா :