![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/05/LGBTQ-Banned-Photo-Credit-Wikipedia-380x214.jpg)
மே 29, உகாண்டா (Uganda News): மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள உகண்டா நாட்டில், LGBTQ எனப்படும் தன்பாலின அல்லது தன் விருப்ப பாலின ஆர்வலர்கள், அது சம்பந்தமான உறவுகளுக்கு சட்டபூர்வ அனுமதி கேட்டு குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், இன்று அந்நாட்டின் அதிபர் யோவெரி முசேவெனி, ஓரினசேர்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்த சட்டத்தை அங்கீகரித்து இருக்கிறார்.
![](https://tmst1.latestly.com/wp-content/uploads/2023/05/Uganda-President-Yoweri-Museveni-LGBTQ-Photo-Credit-Wikipedia-Pixabay.jpg)
அதன்படி, இனி அந்நாட்டில் தன்பாலின சேர்க்கை (Uganda Govt Banned LGBTQ) என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருத்தப்பட்டுள்ளதை அடுத்து, அதனை ஆதரிப்போர் மற்றும் அதற்காக குரல் கொடுப்போரின் இது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். Delhi Shocking Murder: 16 வயது காதலி 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கல்லால் தாக்கி கொடூர கொலை; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள்.!
This legislative development marks a significant step in the country's stance on homosexuality and brings with it a set of legal implications for individuals engaging in same-sex relationships or related activities within Uganda's jurisdiction.
— OFFICE OF THE VICE PRESIDENT (@VPofficeUganda) May 29, 2023
குற்றசாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை போன்றவை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஓரினச்சேர்க்கை தேசத்தின் கலாச்சார, மத மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.