புயல் காற்றின் வேகம் காரை கவிழ்த்துவிட காட்சிகள் (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 31, கரோலினா (South Carolina): அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை இடலியா (Idalia) புயல் தாக்கியது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து புளோரிடா மாகாணத்தை கடந்து பயணித்து வருகிறது. 125 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று-புயல் காரணமாக, அங்குள்ள மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புயல் கடந்து சென்றதை தொடர்ந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தெற்கு கரோலினா பகுதியில் இருக்கும் சார்லஸ்டன் நகரில், இடலியா புயல் கடந்து சென்றபோது, பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றில் கார் ஒன்று தலைகீழாக தூக்கி கவிழ்த்துவிடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளளது. Gingee Saint Case: 90 கிட்ஸின் திருமணமாகாத ஏக்கத்தை பணமாக மாற்றிய சாமியார்; ஆத்திரத்தில் சதக்., சதக்.. காட்டுக்குள் கதறிய பயங்கரம்.! 

நெடுஞ்சாலை பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், பலத்த காற்றை எதிர்கொள்ள இயலாமல் சாலையில் தங்களின் வாகனத்தை நிறுத்தி இருந்தனர். அப்போது, கார் ஒன்றை காற்று கரப்பான் பூச்சி போல புரட்டிப்போட்டது. இந்த பதைபதைப்பு சம்பவம், பின்னால் இருந்த மற்றொரு காரின் கேமிராவில் பதிவாகியுள்ளது.