Accuse Thirumalai | Police Investigation File Pic (Photo Credit: Facebook / Pixabay)

ஆகஸ்ட் 31, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee), பெருங்கப்பூர் கிராமத்தில், வனப்பகுதியையொட்டிய மாந்தோப்பு பகுதியில் வனபத்ரகாளி அம்மன் (Kali Temple) கோவில் இருக்கிறது. காளி கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். அன்று திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனிடையே, காளி கோவிலில் இருந்து சிலநூறு அடிகள் தூரத்தில் சாமியார் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சாமியாரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சென்ற செஞ்சி காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து, சாமியாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததும் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாமியாரின் பெயர் சரவணன் என்ற ஸ்ரீ இஸ்தானந்தா ஸ்வாமிகள் என்பது தெரியவந்தது. Thulasi Face Beauty: துளசியை வைத்து முக அழகை மெருகூட்டுவது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். சாமியாரின் வாக்குமூலம் மற்றும் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சாமியாரை கத்தியில் குத்தியதாக திருமலை என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அதிர்ச்சியுறும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது, திருமலைக்கு திருமண வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் சாமியார் ஸ்ரீ இஸ்தானந்தாவிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது, அவர் தோஷம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த தோஷத்தை நிவர்த்தி செய்தாலும் மட்டுமே திருமணம் ஆகும், காளி கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கான பூஜை செலவுகள் மற்றும் நானே வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என திருமலையிடம் இருந்து ரூ.3 இலட்சம் வரை பணம் பறித்துள்ளார். கடந்த 6 மாதமாக பூஜை, திருமணம் என எதுவும் நடக்காததால், ஆத்திரமடைந்த திருமலை சம்பவத்தன்று சாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். இறுதியில் சாமியார் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்.

திருமலையை கைது செய்த காவல் துறையினர், விசாரணைக்கு பின் சிறையில் அடைத்துள்ளனர்.