மே 26, தென்கொரியா (South Korea): தென்கொரியாவில் உள்ள டேகு (Daegu Airport) விமான நிலையத்திற்கு, ஏசியானா ஏர்லைன்ஸ் (Asiana Airline) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணிகளுடன் தரையிறங்க தயாரானது.
விமானம் நடுவானில் பறந்து சில நிமிடங்களில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை சென்றடையவிருந்த நிலையில், அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் விமானத்தின் அவசரகால கதவு திறந்தது. Premraj Arora Dies: முன்னாள் மிஸ்டர் இந்தியா குளியலறையில் சடலமாக மீட்பு; ஹெவி ஒர்கவுட் செய்தவர் மரணமடைந்த சோகம்.!
இதனால் பயணிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், விமானத்தை கட்டுக்குள் வைத்திருந்த விமானிகள் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தால் 9 பயணிகளுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவ குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Door of Asiana Airlines plane opens in mid-air just before landing in South Korea; 9 people taken to hospital with breathing difficulties pic.twitter.com/rUI6LTRihj
— BNO News (@BNONews) May 26, 2023