Premraj Arora Dies: முன்னாள் மிஸ்டர் இந்தியா குளியலறையில் சடலமாக மீட்பு; ஹெவி ஒர்கவுட் செய்தவர் மரணமடைந்த சோகம்.!
நாம் நமது உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்றாலும், அவற்றை நாம் அதிகப்படியாக செய்தால் கட்டாயம் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டும்.
மே 26, கோட்டா (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா (Kota, Rajasthan) மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்ராஜ் அரோரா (வயது 42). இவர் முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் பாடி பில்டர் ஆவார்.
இவர் நேற்று தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துவிட்டு குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சுயநினைவை இழந்து மயங்கி விழுந்ததாக தெரியவருகிறது.
குளிக்க சென்றவர் மீண்டும் வரவில்லையே என கதவை தட்டிய குடும்பத்தினருக்கு எவ்வித பதிலும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். Meta Layoff: இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்; மார்க்-கின் அதிரடியால் அலறும் வட்டாரம்.!
அப்போது பிரேம்ராஜ் சுயநினைவு இன்றி கிடைக்கவே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரேம்ராஜ் அரோராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த குடும்பத்தினர் அங்கு கதறி அழுதனர். மேலும், நல்லபடியாக உடற்பயிற்சி செய்து குளிக்க சென்றவர் மரணமடைந்துவிட்டாரே என சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 26, 2023 10:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

