Badam Tulsi Cold Drink (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, சென்னை (Kitchen Tips): கோடைகாலத்தில் நாம் அனைவரும் கடைகளில் விற்கக்கூடிய செயற்கையான ரசாயனம் கலந்த குளிர்பானங்களை குடித்து வருகிறோம். இவைகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். எனவே, வீட்டிலேயே பாதம் துளசி குளிர்பானம் செய்து பருகுவது நம் உடலுக்கு புத்துணர்ச்சியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. பாதாம் துளசி குளிர்பானம் செய்வது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். Jewelery Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை – அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம கும்பல் அதிர்ச்சி செயல்..!

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த பாதாம் - 4 கரண்டி

ஊறவைத்த முலாம்பழ விதைகள் - 4 கரண்டி

ஊறவைத்த கசகசா விதைகள் - 2 கரண்டி

ஊறவைத்த பெருஞ்சீரகம் விதைகள் - அரை கப்

சர்க்கரை - அரை கப்

பால் - 4 கப்

பாதாம் இழைகள் - 1 கப்

துளசி இலைகள் - 6

குங்குமப்பூ இழைகள் - 4 பிஞ்ச்

கருப்பு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

பச்சை ஏலக்காய்த்தூள் - 1 கரண்டி

செய்முறை:

முதலில் பெருஞ்சீரகம் விதைகள், பாப்பி விதைகள் மற்றும் பாதாம் போன்றவற்றை மிருதுவாக சாந்து போல கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ இழைகள் மற்றும் பாலை சிறிது நேரம் கொதிக்க வைத்து, பாலில் சர்க்கரையை போடவும். அதனுள், துளசி இலைகள், கருப்பு மிளகுத்தூள் போன்றவற்றை நன்கு கலந்துகொண்டு பாலில் சேர்க்கவும். மேலும், பாலில் கசகசா விதை, பெருஞ்சீரகம் விதை, ஏலக்காய்த்தூள் மற்றும் பாதாம் இழைகளுடன் பாதாம் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதனை குளிரூட்டியில் வைத்து குளிர்ச்சியான பின்பு நாம் பருகலாம்.