Han Kang (Photo credits: X/@NobelPrize)

அக்டோபர் 11, ஸ்வீடன் (Technology News): கடந்த 1901ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

நோபல் பரிசு: அதன்படி 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ (John J. Hopfield and Geoffrey E) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் (David Baker, Demis Hassabis, and John Jumper) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Star Health Data Breach: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்பனை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: இந்த நிலையில் 2024-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (South Korean Author ) இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நாவலான, த வெஜிடேரியன் (The Vegetarian) புக்கர் பரிசை வென்றது. இதனை, தமிழில் எழுத்தாளர் சமயவேல், ‘மரக்கறி’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: