US Storm and Flood (Photo Credit: @Tibortibor15 X)

பிப்ரவரி 17, வாஷிங்டன் (World News): அமெரிக்கா தற்போது கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் (Storm) காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கென்டக்கியில் (Kentucky) மட்டும் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இன்னும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியுள்ளார். Mali Gold Mine: கொத்துக்கொத்தாக சோகம்.. மண்ணில் புதைந்து குழந்தைகளுடன் 48 பெண்கள் பலி: தங்க சுரங்கத்தில் நடந்த சோகம்.!

கடுமையான பாதிப்பு:

இதுகுறித்து, கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறுகையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க வேண்டியுள்ளது. தாய் மற்றும் 7 வயது குழந்தை உட்பட பெரும்பாலான இறப்புகள் கார்கள் வெள்ளத்தில் (Flood) சிக்கியதால் நிகழ்ந்துள்ளது. மக்கள் சாலைகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாநிலம் முழுவதும் 1,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதால் மின்துண்டிப்பு அதிகரிக்கக்கூடும் என்றார். மேலும், பெரும்பாலான பகுதிகளில் 15 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. கடுமையான புயல் காரணமாக பெய்த பெருமழையல் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது என வானிலை ஆய்வாளர் பாப் ஓரவெக் தெரிவித்துள்ளார்.