செப்டம்பர் 18, ஹராரே (World News): ஆப்பிரிக்க நாடுகளில் கடும் பஞ்சம் நிலவி வருவதால், தென் பகுதியில் இருக்கும் நாடுகளில் வறட்சி, பஞ்சம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தினந்தோறும் ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், உணவுப் பற்றாக்குறை (Food Shortage) காரணமாக மக்களின் பசியைப் போக்குவதற்காக 200 யானைகளைக் கொல்ல ஜிம்பாப்வே (Zimbabwe) அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் யானைகளைக் கொண்ட ஜிம்பாப்வே, நமீபியா (Namibia) உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடுமையான வறட்சியால், இரு நாட்டு அரசாங்கங்களும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளன. Pager Blast In Lebanon: சரமாரியாக வெடித்து சிதறிய பேஜர்கள்.. 8 பேர் பலி.. 2750 பேர் படுகாயம்..!
யானைகளை கொல்ல முடிவு:
நமீபியாவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகின்ற நிலையில் யானைகளை (Elephants) கொலை அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, ஜிம்பாப்வேயிலும் நிலவிவரும் வறட்சியால் கடும் பஞ்சம் (Severe Famine) ஏற்பட்டுள்ள நிலையில் 200 யானைகளை கொலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் யானையைக் கொன்று தங்களின் உணவாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
கடும் வறட்சி:
இதற்கு முன் ஜிம்பாப்வே அரசு கடந்த 1988-ஆம் ஆண்டு வறட்சி காரணமாக யானைகளை கொண்டு வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டும் அந்நாட்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக மக்களுக்கு உணவு வேண்டுமென அந்த அரசு முடிவு செய்துள்ளது. அதிலும், குறிப்பாக யானைகள் வேட்டையாடுவதாகவும், விரைவில் வேட்டையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.