ஏப்ரல் 05, தெஹ்ரான் (World News): ஈரானில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டாவது பெரிய மாகாணமான சிஸ்டன்-பாலுசெஸ்தானில் இருக்கின்ற ராஸ்க், சர்பாஸ் மற்றும் சாஹ்பஹார் ஆகிய நகர் பகுதியில் ராணுவ சோதனை சாவடிகள், கடலோர காவல்நிலையம் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்த முயன்றபோது, அவர்கள் பொதுமக்களை சிலரை பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். Minor Girl Forced Into Prostitution: 17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம்; சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய பெண் தரகர் கைது..!
இதனையடுத்து, கூடுதல் பாதுகாப்பு படையினர் வந்து பொதுமக்களை மீட்பதற்காக பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு (Gun Shooting Dead In 18 Terrorists) நடத்தி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் பயங்கரவாத கும்பலில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பணய கைதிகளை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர். மேலும், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. விடியவிடிய நடந்த இந்த பயங்கர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.