Child Vishva | Death File Pic (Photo Credit: Twitter / Pixabay)

செப்டம்பர் 18, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம் (Tambaram), சானடோரியம் (Sanatorium) சத்யா தெருவில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மகன் விஷ்வா (வயது 11). சிறுவன் விஷ்வா இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

கடந்த சனிக்கிழமை விடுமுறையையொட்டி, மாலை நேரத்தில் சிறுவன் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். சானடோரியம் மேம்பாலம் பகுதியில், தனியார் குத்தகையில் இருக்கும் இரயில்வே இடத்தில் அனைவரும் முகாமிட்டுள்ளனர்.

அங்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எருக்கம்பூ பறிக்க நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர். அச்சமயம், அங்கு தேங்கியிருந்த மழை நீர் பள்ளத்தில் மீன்கள் இருக்கின்றனவா? என விஷ்வா ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் நீரில் விழுந்து சேற்றில் சிக்கிக்கொண்டு உயிருக்காக துடிதுடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், கூச்சலிட்டவாறு உதவிக்காக அபயக்குரல் எழுப்பி இருக்கின்றனர். Aging Caution: முதுமைக்கான காரணங்கள் என்னென்ன?.. விபரங்கள் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சிட்லபாக்கம் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சடலத்தை மீட்டனர்.

பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிட்லபாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களில் பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனித்தல் வேண்டும். நண்பர்களுடன் அல்லது தனியாக நீர் தேங்கியுள்ள குட்டைகளுக்கு செல்லக்கூடாது, சென்றாலும் நீரில் இருப்பதை ஓரத்தில் இருந்தவாறு எட்டிப்பார்க்க கூடாது என பெற்றோர் பிள்ளைகளை கண்டித்து விழிப்படைய செய்வதே அவர்களின் உயிரை பாதுகாக்கும்.