Joe Biden (Photo Credit: Twitter)

அக்டோபர் 17, வாஷிங்க்டன் டிசி (World News): வரலாற்றின் முந்தய காலத்தில் தனதாக இருந்த, இன்றைய இஸ்ரேல் (Israel) நாட்டை கைப்பற்ற எண்ணி படையெடுத்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் (Hamas Terror Group) செயல்பாடுகள் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் (Israel Army) முறியடிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்.07ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலை எதிர்த்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு படைகள் பதில் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பாலஸ்தீனியத்தின் (Gaza Strip, Palestine) காசா நகரம் குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். அதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் பயங்கரவாதிகளை கூண்டோடு வேரறுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இஸ்ரேலின் செயல்பாடுகள் பாலஸ்தீனிய நகரை மீண்டும் நாடுபிடிப்பது போல இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என அமெரிக்காவும் இஸ்ரேலை கண்டித்து. Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!

Israel Army Spot on Palestine Border Near Gaza Strip (Photo Credit: @ANI, Reuters Twitter)

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் தொடங்கியதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா (US Army) ஆயுதங்கள் அனுப்பி, போர் கப்பலையும் மத்திய கிழக்கு கடல் (Middle East Countries) பகுதியில் நிலைநிறுத்தி தனது ஆதரவினை வெளிப்படுத்தியது. இறுதியில் இஸ்ரேலின் செயல்பாடுகள் தடம்மாறியதால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கு நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நேரில் செல்லவுள்ளார். அங்கு ஹமாஸ் பயங்கரவாத குழு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளால் 30 அமெரிக்கர்கள் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலரும் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலை என்ன? விடுவிக்கப்படுவார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற சந்தேகங்களுக்கு இனி விடை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் செல்லவுள்ளதால், அங்கு அமெரிக்கா தனது முழு படைபலத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் (Antony Blinken) உறுதி செய்துள்ளார்.