US Airstrikes (Photo Credit: @AbebeSamson1 X)

மார்ச் 16, சானா (World News): ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில், அமெரிக்க போர்விமானங்கள் நேற்று திடீரென தாக்குதலை முன்னெடுத்தது. அங்குள்ள வடக்கு மாகாணமான சனாவில், ஹவுதி படையினருக்கு எதிராக அந்தந்த தாக்குதல் சம்பவத்தில், 13 பேர் அமெரிக்க இராணுவத்தினரால் கொலை செய்யப்டட்டார். இந்த தகவலை ஹவுதி படை குழுவும் உறுதி செய்துள்ளது. அல்-ஜெராப் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் தகவல் உள்ளூரில் எடுக்கப்பட்ட வீடியோவின் பெயரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வரும் ஏமனில், உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது. Shocking Video: அதிக இரைச்சலுடன் இசைக்கச்சேரி.. தட்டிக்கேட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் கும்பல்.!

தாக்குதலை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது - டிரம்ப் ஆவேசம்:

அதே நேரத்தில், ஏமன் ஆதரவில் செயல்படும் ஹவுதி அமைப்பு, மத்திய தரைக்கடல் பகுதியில், அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அதன் நட்பு நாடுகளின் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பல கோடிக்கணக்கான வணிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஹவுதிக்கு எச்சரிக்கை விடுக்கும் பொருட்டு, அமெரிக்க விமானங்கள் ஏமன் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹவுதி படையினர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வணிக பயணங்கள் மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக செயல்படுவதை அமெரிக்கா ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என கூறி இருக்கிறார்.

ஹவுதி படைக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதல்: