Visuals From Video (Photo Credit: @ManojSh28986262 X)

மார்ச் 16, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra) மாவட்டம், லக்கிசாரை கிராமத்தில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. அப்போது, உள்ளூர் இளைஞர்கள் சார்பில் இசைக்கச்சேரி போன்றவை நடைபெற்றது. அதிக இரைச்சல் சத்தத்துடன் இசைக்கச்சேரி நடைபெற்றதால், அதனை பெண் ஒருவர் எதிர்த்து பேசி இருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த சிலர், பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.! 

நால்வர் கும்பல் அதிர்ச்சி செயல்:

மேலும், ஒருகட்டத்தில் கும்பலாக சேர்ந்து பெண்ணை தடி, பெல்ட் ஆகியவற்றால் கடுமையாக தாக்கி துன்புறுத்தி இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களில் சிலர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கொடுத்த புகாரின் பேரில் உதால் சிங், ரூபி, குண்டன், அபிஷேக் ஆகியோரின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி: