Russian President Election Result 2024 (Photo Credit: @BNONews)

மார்ச் 18, மாஸ்கோ (World News): உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவில், கடந்த மார்ச் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 08 வது அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்றொரு அதிபர் தேர்தல் (Russia President Election 2024) வாக்குப்பதிவு நிறைவுபெற்று, வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. ரஷியாவில் நடந்த தேர்தலில், இந்த தேர்தலில் முதல் முறையாக வீட்டில் இருந்தபடி இணையத்தளம் வாயிலாக வாக்குகளை பதிவு செய்யும் இ-வோட்டிங் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை சீர்குலைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து செயல்பட்ட ஹேக்கர்கள் குழு, சுமார் 1.6 இலட்சம் முறை சைபர் தாக்குதலுக்கு முயற்சித்ததாகவும், அதனை ரஷியா திறம்பட எதிர்கொண்டு வெற்றிகண்டதாகவும் அந்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி எல்லா பிம்பிலோவ் தெரிவித்தார். Activated Indian Sim Racket: மோசடி செயலுக்காக இந்தியாவில் இருந்து வியட்னாம் பறக்கும் சிம்கள்.. திரைப்பட பாணியில் மக்களை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.! 

அதிபருக்கான தேர்தல்: அந்நாட்டு அரசியல் சாசனங்கள் விதிமுறைப்படி, இந்த தேர்தலில் வேட்பாளர்களில் யாருமே பாதிக்கு மேல் வாக்குகளை பெறவில்லை என்ற பட்சத்தில் ஏப்ரல் மாதம் 07ம் தேதி மறுதேர்தல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மே மாதம் 07ம் தேதி அதிபர் பொறுப்பேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். நடப்பு தேர்தலில் அதிபராக தேர்வு செய்ய புதிய மக்கள் கட்சியின் சார்பில் விளாடிஸ்லாவ் தவன்கோவ், சுயேச்சை வேட்பாளராக விளாடிமிர் புதின், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர். Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.! 

விளாடிமிர் புதின் வெற்றி: இந்நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டி 87.85% பேர் வாக்களித்து இருக்கின்றனர். இதனால் அவர் மீண்டும் ரஷிய அதிபராக 2030 வரை நீடிப்பார். அந்நாட்டில் அதிபருக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், 2024ல் தேர்தல் நிறைவுபெற்றதை தொடர்ந்து 2030 வரை அதிபர் பொறுப்பில் விளாடிமிர் புதின் தொடருவார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் 4% வாக்குகளை கூட பிற எந்த வேட்பாளரும் பெறவில்லை.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள விளாடிமிர் புதின், ரஷிய இராணுவத்தை பன்மடங்கு மேம்படுத்தப்போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.