ஆகஸ்ட் 04, ஐரோப்பா (World News): ஒவ்வொரு நாட்டிலும் பருவ காலங்களில் பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தாலி நாட்டின் லாசியோ பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அங்குள்ள சுகாதார அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட ஆய்வில் இதுவரை இந்த வைரஸால் 10 பேர் வரை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
கொசு கடிப்பதால் உயிர் போகும் அபாயம் :
மேலும் 5 ஐரோப்பிய நாடுகளிலும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலெக்ஸ் வகை கொசுவினால் பரவுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளை கடித்த பின் மனிதர்களை கொசு கடிப்பதால் நமக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இதனால் கடுமையான உடல் நலக்கோளாறுகளை எதிர்கொள்ளும் மனிதர்கள், சாதாரண காய்ச்சல் என நினைத்தால் மரணமும் ஏற்படும். World News: பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்தியாவை எதிர்க்கும் அமெரிக்கா.. இந்தியா குறித்து கடும் விமர்சனம்.!
மரணத்தை உண்டாக்கும் வைரஸ் :
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிப்பு, மூளை வீக்கம் போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி இந்த வைரஸ் மரணத்தை உண்டாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை தாக்கி முடக்கும் தன்மை கொண்ட இந்த வைரஸ் பாதிக்கப்பட்டால் 20% நபர்களே உயிர் பிழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.