ஆகஸ்ட் 12, கியூவ் (World News): கடந்த 24 பிப்ரவரி 2022ம் ஆண்டு அன்று உக்ரைன் நாட்டை தன்னிடம் சரணடையச்சொல்லி இராணுவ தாக்குதலை கையில் எடுத்த ரஷியா, இன்று வரை உக்ரைனை சிறிது சிறிதாக கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னாள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த உக்ரைன், சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தனி நாடாக உதயமானது. தற்போது, அந்நாட்டின் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) பணியாற்றி வருகிறார்.
நேட்டோவுடன் இணைய உக்ரைன் மும்மரம்:
ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு, தங்களை நேட்டோ படைகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நேட்டோ படைகளில் அமெரிக்காவும் அங்கமாக இருக்கிறது. இதனால் ரஷியாவுக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, உக்ரைன் அரசின் முடிவுக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின.
உக்ரைனுக்கு உதவி செய்யும் அமெரிக்கா:
இதனால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Russian President Vladimir Putin) உத்தரவப்படி, ரஷிய இராணுவம் உக்ரைனுக்கு எதிராக போரை தொடங்கியது. போரில் வேறு நாடுகள் நேரடியாக களத்திற்கு வந்தால், அந்நாடும் நடக்கும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என ரஷிய அதிபர் எச்சரிக்கை விடுத்த காரணத்தால், இன்று வரை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு பொருள் மற்றும் பண உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட இராணுவ உபகரணங்களை கொண்டு உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது. Hindenburg Research: சர்ச்சையை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை; அதானியுடன் சேர்ந்து இவர்களும் கூட்டா?.. பகீர் தகவல்.!
இராணுவ வீரர்களை இழந்தும் தொடரும் போர்:
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்து நடைபெறும் போரின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் சரணடையும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்ற முழக்கத்துடன் ரஷியா தொடர்ந்து தன்னிடம் உள்ள இராணுவ உபகரணங்களையும், வீரர்களும் பலிகொடுத்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைன் சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை இருதரப்பிலும் இராணுவ இழப்புகளின் எண்ணிக்கை மட்டும் 60 ஆயிரம் வீரர்கள் என்ற எண்ணிக்கையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் தாக்குதலை தொடங்கியது:
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை வைத்து உக்ரைன் ரஷிய நிலப்பரப்பில் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. ரஷியாவின் எல்லைப்புற நகரமாக கருதப்படும் குர்ஷ்க் பகுதியில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் 76000 பேரை ரஷ்ய இராணுவம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. ரஷ்யாவின் எல்லைக்குள் 30 கி.மீ அளவில் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் போரின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலகளாவிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணுமின் நிலையத்தில் தீ வைப்பு:
அதேவேளையில், ரஷிய இராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) நியூக்ளியர் மின்னுற்பத்தி மையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதலை ரஷியா தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், கண்டனமும் எழுந்து வருகிறது. அணு ஆற்றல் மின்னுற்பத்தி மையங்களை குறிவைத்து உக்ரைனை ரஷியா அச்சுறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Enerhodar. We have recorded from Nikopol that the Russian occupiers have started a fire on the territory of the Zaporizhzhia Nuclear Power Plant.
Currently, radiation levels are within norm. However, as long as the Russian terrorists maintain control over the nuclear plant, the… pic.twitter.com/TQUi3BJg4J
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський () August 11, 2024