ஆகஸ்ட் 11, புதுடெல்லி (New Delhi): இந்திய நிதி விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க நிதி புலனாய்வு பத்திரிகையான ஹிண்டன்பர்க், இன்று தனது அறிக்கை அதானி குழுமத்திற்கு எதிராக மீண்டும் இரண்டாவது முறையாக வெளியிட்டது. முந்தைய அறிக்கையில் அதானி குழுமம் மீது பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதானி குழுமத்துடன் தொடர்புடைய பகீர் குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறது. அதாவது, இந்திய பங்குகள் & பரிவர்த்தனை வாரியமான செபியின் (SEBI) தலைவர் மதாபி புச், அவரின் கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமத்துடன் முறைகேடான பங்குகளை கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவல் புச் தரப்பில் இருந்து முற்றிலுமாக மறுக்கப்பட்டு இருக்கிறது. Electric Pole Fall Down: மின்கம்பம் கீழே விழுந்து வியாபாரி படுகாயம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. நொடியில் துயரம்.!
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு மாதபி மறுப்பு:
பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் கடல் சார்ந்த நிறுவனங்களில் வணிக ரீதியிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு செபி நிறுவனத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மாதவி, 2015ம் ஆண்டே அதானி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு பங்குகளில் முறைகேடான முதலீடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மதாபி புச் செபி நிறுவனத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017க்கு முன் மாதபியின் கணவர் பெயரில் முதலீடுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மாதபி மற்றும் அவரின் கணவர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களின் வங்கி பணப்பரிவர்த்தனைகளையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது ஹிண்டன்பர்க் கூற வருவது என்ன?
அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் செபி வசம் விசாரணைக்காக இருந்தபோதும், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதானி குழுமத்திற்கு நம்பிக்கையுடன் இருந்து வந்த செபி தலைவர் மதாபி, குழுமத்துடன் கொண்ட நல்லிணக்க நடவடிக்கை காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. வெளிநாட்டு கணக்குகளிடம் இருந்து புச் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வைத்துக்கொண்ட பணப்பரிவர்த்தனை வைத்து ஹிண்டன்பர்க் கூறியுள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022ல் மதாபி உயர்பதவிக்கு வந்தபோது, வினோத் அதானி பயன்படுத்திய அறக்கட்டளையை கொண்டு மொரிஷியஸ் நிதி நிர்வாகி அறக்கட்டளையின் மேலாளர்களிடம் நிதி முதலீடுகள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்து இருந்தால் எளிதாக கண்டுபிடித்திருக்க முடியும் என்ற நிலையிலும், செபி தலைவர் வைத்திருந்த நெருங்கிய நட்பு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.