Dec Movies 2022: டிசம்பர் 2022ல் களமிறங்கும் அட்டகாசமான 6 பாலிவுட் திரைப்படங்கள் என்னென்ன?.. விஜய் சேதுபதியின் படமும் ரிலீஸ்.!
Template: New Release Movie List

டிசம்பர், 8: பாலிவுட் (Bollywood) திரையுலகில் திரைப்படங்களின் வருகைக்கும் வெற்றிக்கும் என்றுமே பஞ்சம் இருக்காது. இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முக்கிய அந்தஸ்தை பெற்றுள்ள திரையுலகில் பாலிவுட்டுக்கு என்றுமே தனியிடம் உண்டு. சர்வதேச அளவில் எப்படி மும்பை மாநகரம் கவனிக்கப்படுகிறதோ, அதனைப்போலவே அதனை மையமாக வைத்து வெளியாகும் பாலிவுட் திரைப்படங்களும் கவனிக்கப்படுகின்றன.

அந்த வகையில், டிசம்பர் மாதம் திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாலிவுட் திரையுலகில் பல படங்கள் வெளியாகவுள்ள. அவற்றின் விபரங்கள் குறித்த செய்தியை இன்று விரிவாக காணலாம்.

09 டிசம்பர் 2022 - பிப்பா (Pippa):

கடந்த 1971ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் கலந்துகொண்ட படைவீரன் Brigadier Balram Singh Mehta-வின் உண்மை சரித்திரம் குறித்து எடுக்கப்படும் படம் பிப்பா. இப்படத்தை ராஜா மேனன் இயக்கியுள்ளார். முர்னல் தாகூர், இஷான் கட்டார், பிரியன்ஸு பைந்யுலி உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். Coconut Milk Rice: குட்டீஸ்களுக்கு பிடித்த தேங்காய் சாதத்தை சுவையாக செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கு அசத்தல் டிப்ஸ்.. சமையலில் கலக்குங்கள்..! 

இப்படம் இந்திய வரலாற்றில் உள்ள பிரதிபலிப்பை உண்மை சம்பவமாக எடுத்து கூறவிருப்பதாலும், படம் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை தொடர்பான வரலாறு என்பதாலும் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 09ம் தேதி படம் திரையில் வெளியாகவுள்ளது.

09 டிசம்பர் 2022 - மாரிச் (Maarrich):

துருவ் லதேர் இயக்கத்தில் நசுருதீன் ஷாஹ், துஷ்க்ஷர் கபூர், டிபனிடா சர்மா உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாரிச். முழுக்க முழுக்க கலகலப்பான கதையம்சத்தில் உருவாகிவரும் மாரிச், மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படம் டிசம்பர் 9ல் வெளியாகிறது.

09 டிசம்பர் 2022 - சலாம் வெங்கி (Salaam Venky):

தேசிய விருதை தட்டிச்சென்ற பெண் இயக்குனர் ரேவதியின் இயக்கத்தில், வயதானாலும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் கஜோல், விஷால், ஆஹானா, ராகுல் போஸ், ராஜிவ் உட்பட பலரும் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் சலாம் வெங்கி. இப்படத்தில் கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. படம் 09 டிசம்பரில் திரையில் வெளியாகவுள்ளது.

23 டிசம்பர் 2022 - சிர்க்ஸ் (Cirkus):

ரோஹித் செட்டி இயக்கத்தில் முழுக்கமுழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சிர்க்ஸ். இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வருண் ஷர்மா ஆகியோர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பூஜா ஹெட்ஜ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சித்தார்த்தா ஜாதவ், ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, ராஜேஷ், அஸ்வினி உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அதனைப்போல, பாலிவுட் திரையுலகின் நாயகி தீபிகா படுகோன், அஜய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கவுள்ளனர். இதனால் இப்படம் பாலிவுட்டில் அதிகளவு எதிர்பார்க்கபடுகிறது. இப்படம் 23 டிசம்பரில் வெளியாகவுள்ளது.

23 டிசம்பர் 2022 - மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas):

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கத்ரினா கைப், விஜய் சேதுபதி, சஞ்சய் கபூர் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் ஹிந்தி மொழியில் வெளியாகும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாகவும், மக்கள் செல்வனாகவும் இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இப்படம் 23 டிசம்பரில் திரையில் வெளியாகவுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 10:30 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).