ஜனவரி 01, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் திரையுலகம் மிகப்பெரிய முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இன்னும் பிற திரைப்பணியாளர்கள் என மிகப்பெரிய அமைப்பையும், பாரம்பரிய பின்னணியையும் கொண்டது. முந்தைய காலங்களில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளைச் சேர்ந்த நாயகர்களுக்கு வெற்றிகளை கொடுத்த திரைஉலகமாகவும், அடையாளத்தை தந்த இடமாகவும் இருக்கிறது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் திரையுலகில் உட்கட்டமைப்பு, திரைப்படங்களின் கருத்து, மக்களின் மனமாற்றம் உட்பட பல்வேறு காரணிகளால் படங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என மக்களுக்கு பிடிக்காத படங்கள், பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருந்தாலும் அவை புறக்கணிக்கப்பட்டது. சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியை அடைந்த படங்களும் இருக்கின்றன. ஆனால், உண்மையில் 2024ம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு போதாத காலம் என்பதைப்போல அமைந்தது. Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
18 படங்கள் மட்டுமே தப்பித்தது:
அதாவது, 2024ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து 2024 முடிவு வரையில் 241 படங்கள் திரைக்கு வந்துள்ளன. 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றியை அடைந்துள்ளது. இதில் 186 படங்கள் சிறிய பட்ஜெட் எனப்படும் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை தொகை செலவிடப்பட்ட எடுக்கப்பட்டவை ஆகும். சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் மொத்தமாக ரூ.400 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றியடைந்த 18 படங்கள் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்ல இலாபத்தை வழங்கி இருக்கிறது. எஞ்சிய படங்கள் அனைத்தும் மிகப்பெரிய தோல்வியை கொடுத்துள்ளது. குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்துள்ளது. தி கோட், அமரன், ராயன் போன்ற படங்கள் ரூ.50 முதல் ரூ.250 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு நல்ல வெற்றியை அடைந்தது. நடுத்தர பட்ஜெட்டில் இருக்கும் அரண்மனை 4, மெய்யழகன், மஹாராஜா படங்கள் நடுத்தர வெற்றியும், வாழை, டிமாண்டி காலனி 2 , லப்பர் பந்து, லவ்வர் ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வெற்றியையும் அடைந்தது. இவை தவிர்த்து 223 படங்கள் மிகப்பெரிய தோல்வியை அடைந்து இருக்கிறது. இந்தியன் 2, கங்குவா, வேட்டையன் என உச்ச நடிகர்களின் படங்களும் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. 241 படங்களில் 7% படங்கள் மட்டுமே வெற்றி என்ற நிலையில், எஞ்சிய தயாரிப்பாளர்களின் நிலை தான் கவலைக்கிடம்.
விஷாலின் பேச்சு உண்மையானதா?
மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து தோல்வி அடைந்த நிர்வாகம், அடுத்த படத்தில் தப்பித்துக்கொண்டாலும், திரைப்பட கனவுடன் படத்தை தயாரித்து வழங்கிய தயாரிப்பாளர்கள், புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படம் எடுத்தோர் போன்றோரின் நிலை கவலைக்கிடம் தான் என கூறுகின்றனர் விபரம் அறிந்த திரைப்பட விமர்சகர்கள். நடிகர் விஷால் அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைக்கு திரைத்துறையில் நிலைமை சரியில்லை. சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்க நினைப்போர், உங்களின் பணம் ரூ.4 கோடி, ரூ.5 கோடி இருந்தால், வங்கியில் அதனை வையுங்கள். படம் எடுத்துகிறேன் என தோல்வி அடைந்து பணத்தையும், எதிர்காலத்தையும் இழக்க வேண்டாம் என பேசி இருந்தார். அன்றைய காலத்தில் இந்த பேட்டி விஷால் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை முடக்க நினைப்பதாக பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆண்டு முடிவின் நிலவரம் படங்களின் தோல்வியை அம்பலப்படுத்தி மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் மாதம் 4 முதல் 20 படங்கள் வெளியானாலும், அதில் 2 படங்கள் மக்களின் கவனத்தை பெரும், ஒன்று வசூல் சாதனை செய்யும். ஆனால், இன்றளவில் அந்நிலை தலைகீழாக மாறி இருக்கிறது. மாதத்தில் எண்ணற்ற படங்கள் வெளியானாலும், அவை மக்களின் தாக்கத்தை குறைந்தளவு பெற்றதே தோல்விக்கு வித்திட்டு இருக்கிறது. எஞ்சிய வெற்றிபெற்ற படங்கள் அதன் கருத்து, மக்களின் விருப்பம் உட்பட பல்வேறு காரணங்களால் தப்பித்துக்கொண்டது.