பிப்ரவரி 02, மும்பை (Mumbai): பாலிவுட் திரையரங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் பூனம் பாண்டே (Poonam Pande). இவர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, நடிகையாக அந்தஸ்து பெற்றார். முன்னதாக இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முடிவிலும், ஐபிஎல் போட்டியில் முன்னணியில் இருந்த ஒரு அணியின் வெற்றிக்கு பின்னும் நிர்வாணமாக வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்கு பெயர்போன நடிகையாகவும் இருந்து வந்தார்.
சில படங்களில் நடித்தாலும் சர்ச்சையால் புகழ்பெற்ற நடிகை: இந்தி மொழியில் வெளியான நாசா, தி ஜனார் ஆப் கர்மா ஆகிய படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இது தவிர்த்து தெலுங்கு, போஜ்பூரி, கன்னடா ஆகிய படங்களில் பாடலுக்கு சிறப்பு தோற்றத்திலும் நடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் கருப்பை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில், தற்போது அவர் உடல் நலக்குறைவால் அகால மரணம் அடைந்தார். Sachin Meets Tendulkar: ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்; டீ-சர்ட் போட்ட ரசிகருக்காக நெகிழ்ச்சி செயல்.!
திருமணமும், விவாகரத்தும்: நிர்வாண விஷயங்களுக்கு எந்த விதமான ஐயமும் கொள்ளாத நடிகை பூனம் பாண்டே, பாலிவுட் திரையுலகை ஆபாச படத்தலமாக மாற்றியதாக வழக்கையும் சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், செப்டம்பர் 2021ல் தனது கணவரை பிரிந்தார். தற்போது தனியாக வாழ்ந்து வரும் நடிகை கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு இயற்கை எய்தி உள்ளார்.
திடீர் மரணம்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டு வந்த நடிகை திடீரென கருப்பை புற்றுநோயால் திடீர் மரணம் அடைந்துள்ளது அவரின் பின்தொடர்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram