Director Shafi (Photo Credit: Wikipedia)

ஜனவரி 26, கொச்சி (Cinema News): மலையாளத் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம்வந்தவர் ஷபி என்ற ரஷீத் எம்எச் (MH Rasheed Shafi). இவர் மலையாள மொழியில் வெளியாகிய பல படங்களை இயக்கி வழங்கி இருக்கிறார். கடந்த 1995ம் ஆண்டு முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர், 2001ல் நடிகர் ஜெயராமை வைத்து ஒன் மென் ஷோ படத்தை இயக்கி, இயக்குனராக களமிறங்கினார். பெரும்பாலும் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் இயக்குனராக தோன்றி பலரையும் மகிழ வைத்து இருக்கிறார். Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.! 

காமெடி-குடும்ப படங்களால் புகழ்பெற்றவர்:

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு நடிகர்கள் சியான் விக்ரம், மணிவண்ணன், பசுபதி, அசின், வைகைப்புயல் வடிவேலு உட்பட பலர் நடிக்க வெளியான மஜா திரைப்படத்தை இயக்கி வழங்கி இருந்தார். மஜா திரைப்படம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் தொம்மனும் மக்களும் என்ற பெயரில் வெளியானது. அதே திரைப்படம் தமிழில் மஜாவாக வெளியானது. பெருபாலும் மலையாள படங்களை இயக்கி வாங்கியவருக்கு தற்போது 58 வயது ஆகிறது. காமெடியுடன் குடும்ப அன்பையும் தனது படைப்பின் வாயிலாக பகிர்ந்து, மலையாள மக்களால் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டவராகவும் ஷபி இருந்திருக்கிறார்.

பக்கவாதம் காரணமாக மரணம்:

இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த ஷபி, கொச்சியில் செய்யப்பட்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவு மலையாள திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் திடீரென பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர், நள்ளிரவு 12:15 மணியளவில் உயிரிழந்தார்.

மகிழ்ச்சியின் அடையாளமாக ஷபியின் படங்கள் இருந்ததாக ரசிகர் பெருமிதம்:

ஷபியின் படங்களில் உள்ள கிளைமேக்ஸ் காட்சிகளை பகிர்ந்து ரசிகர்கள் வருத்தம்: