Devara Release Fans Celebration (Photo Credit: @Chrissuccess X)

செப்டம்பர் 27, சென்னை (Cinema News): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் படைபலத்தை கொண்ட முக்கிய நடிகராகவும் வலம்வருபவர் ஜூனியர் என்டிஆர் (Junior NTR). இவரின் 30வது திரைப்படம் தேவரா (Devara). ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், பிரகாஷ்ராஜ், நந்தமுரி கல்யாண் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியானது தேவாரா:

யுவசுதா ஆர்ட்ஸ்ட் & என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கோர்டாளா சிவா இயக்கியுள்ள இப்படம், உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் இன்று (27 செப் 2024) அன்று திரையரங்குகளில் வெளியானது. இதனால் ஆந்திரா & தெலுங்கானா மாநிலங்களில் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கடந்த 1980 - 1990 காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், வெற்றிவாகை சூடும் என படக்குழு எதிர்பார்த்து வருகிறது.

Devara Poster (Photo Credit: @Chrissuccess X)

ஆடு தலை துண்டிக்கப்பட்ட சம்பவம்:

ரசிகர்கள் நேற்று இரவு முதல் தொடர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, திரைப்படத்தில் படத்தை கண்டு ரசித்தனர். இந்நிலையில், இன்று தேவாரா படம் வெளியானதை முன்னிட்டு, தெலுங்கு ரசிகர்களில் சிலர் ஆடு ஒன்றை அழைத்து வந்து, அதனை தேவாரா படத்தின் போஸ்டருக்கு முன்பு கூர்மையான அரிவாள் கொண்டு வெட்டி பலிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தலையை துண்டாக துண்டித்து தனது கைகளில் எடுத்த ரசிகர் ஒருவர், போஸ்டரின் முகத்தில் அதனை தீட்டிய சம்பவமும் நடந்துள்ளது. Vaazhai OTT Release: பாலாவையே அழ வைத்த 'வாழை'.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!

பாலாபிஷேகத்தில் ஆரம்பித்தது ஆடு பலிகொடுப்பதில் வந்து நின்றுள்ளது:

இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்றைய திரைக்கூத்தாடிகளின் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, தாங்கள் திரையில் காணும் நாயகனே தன்னை வாழவைக்கும் தெய்வம் என நம்புவதால் நடக்கும் மாய பிம்பையே இவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் நடிகர்களின் போஸ்டருக்கு பால் கொண்டு அபிஷேகம், பூமாலை கொண்டு கொண்டாட்டம் என இருந்த நிலையில், இவர்கள் ஒருபடி மேலே சென்று ஆடு பலி கொடுத்து ரத்தத்தால் அபிஷேகம் செய்து பதறவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஆடு தலையை வெட்டி பலிகொடுத்த பதைபதைப்பு காணொளி: இளகிய மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம்..