
மே 21, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் (Ravi Mohan Divorce Case), ஆர்த்தி என்பவரை காதலித்து, கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். Vishal & Sai Dhanshika: காதலியை கரம்பிடிக்க தயாரான விஷால்.. திருமண தேதியை அறிவித்து முத்தமிட்ட காதல் ஜோடி.!
ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்:
இந்நிலையில், இன்று (மே 21) விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனக்கும், தன் இரு மகன்களுக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் ஜுன் மாதம் 12ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு, நடிகர் ரவிமோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.