
மே 20, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் புரட்சித்தளபதி என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விஷால். இதுவரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள விஷால், சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் மூலமாக மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் நேற்று சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகாவின் "யோகி டா" திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
காதலை உறுதிசெய்த நடிகை :
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்ட நிலையில், நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், நேற்று இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். யோகிடா படத்தின் இயக்குனர் உதயகுமார் மேடையிலேயே இருவரையும் கலாய்த்த நிலையில், இருவரும் காதல் வெட்கத்தால் தலைகுனிந்து சிரித்தனர். Kenishaa: ரவிமோகன் - ஆர்த்தி மாறி மாறி குற்றச்சாட்டு.. சர்ச்சைக்கு நடுவே வைரலாகும் கெனிஷாவின் பதிவு.!
திருமண தேதியை அறிவித்த காதல் ஜோடி :
அதனை தொடர்ந்து பேசிய சாய் தன்ஷிகா மற்றும் விஷால் தாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்ய விருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பேசிய விஷால், "நாங்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம். எங்களது நட்பு காதலில் விழுந்து தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. இதனை எங்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வதே எனது வாழ்நாள் குறிக்கோள்" என தெரிவித்தார். காதல் ஜோடிகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமண தேதி அறிவித்து முத்தமிட்ட விஷால் - சாய் தன்ஷிகா :
Tamil hero #Vishal announced his marriage with #SaiDhanshika ! pic.twitter.com/4K6cYV1jbg
— North East West South (@prawasitv) May 20, 2025