![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/04/Aarudhra-Gold-Scam-Issue-Actor-R.K-Suresh-Photo-Credit-Twitter-380x214.jpg)
ஏப்ரல் 01, சென்னை (Cinema News): தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் தங்கம் மற்றும் முதலீடு (Aarudhra Gold Investment Forgery) பணத்திற்கு அதிக வட்டிக்கடன் என்ற ஆசை காண்பித்து மக்களின் பணத்தை மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் பாஜக பிரமுகர் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக அந்த நிறுவனம் ரூ.2500 கோடி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் நடிகர் ரூசோ என்பவரும் கைது செய்யப்பட்டார். Maharashtra Former Action: கிணறு தோண்ட அனுமதிக்கு ரூ.2 இலட்சம் லஞ்சம் வேண்டும் – அரசு அதிகாரியை பணத்தால் அலறவிட்ட விவசாயி.!
அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு விவகாரத்தில் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷுக்கும் (R.K Suresh) மோசடியில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. ரூசோவின் வாக்குமூலத்தின் பேரில் ஆர்.கே சுரேஷை அதிகாரிகள் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், நடிகர் ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், பொருளாதார குற்றத்தடுப்பு காவல் துறையினர் ஆர்.கே சுரேஷை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது திரைஉலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையிலிருந்து தப்பிக்கவே ஆர்.கே சுரேஷ் கடந்த 2 மாதமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.