Actor Ajith & Actress Shalini Video (Photo Credit : Instagram)

ஆகஸ்ட் 10, சென்னை (Cinema News): கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமர்க்களம். இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்த அஜித்குமார் - ஷாலினிடையே காதல் மலர்ந்து கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் இவர்கள் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படுகின்றனர்.

நடிகர் அஜித்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நடிகை ஷாலினி :

நடிகை ஷாலினி (Shalini Ajithkumar) அவ்வப்போது அஜித் குமாருடன் எடுக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்வார். அந்த வகையில் நேற்று ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பூஜை ஒன்றில் கலந்து கொண்ட அஜித்குமாரின் காலில் ஷாலினி விழ முயற்சிக்கிறார். இதனை அஜித்குமார் வேண்டாம் என்று கூறி தடுக்கிறார். மேலும் "வீட்டுக்கு போய் நான் விழனும்" என்று அவர் கூறவே, அங்கிருந்து பலரும் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தனர். நடிகை மிருணாள் தாகூருடன் டேட்டிங்கில் நடிகர் தனுஷ்?.. இணையத்தில் பரவும் பார்ட்டி வீடியோ.! 

அஜித்குமாரின் வாழ்க்கை பயணம் :

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்குமார் திரைப்படத்தில் நடிப்பதுடன் கார் ரேசிங், டூவீலர் பயணம் என தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த பயணத்திற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.

நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ :

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)