Veera Dheera Sooran Trailer (Photo Credit: YouTube)

மார்ச் 20, சென்னை (Cinema News): எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே எடிட்டிங்கில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran). இரண்டு பாகமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் வெளியீடு இரண்டாவது பாகம் ஆகும். இந்த படத்தின் முதல் பாகம் இரண்டாவதாக வெளியாகியது. பொதுவாக சினிமாவில் ஒரு கதையை தொடங்கி, பின் இரண்டாவது பாகத்தில் அதற்கான விடை தொடர்பான விஷயங்கள் இடம்பெறும். ஆனால், வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண் குமார், இரண்டாவது பாகத்தை முதலில் வெளியிட்டு, பின் முதல் பாகத்தை வெளியிடும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். Empuraan Trailer: மோகன் லாலின் 'எம்புரான்' ட்ரைலர் அறிவிப்பு; நாளை வெளியீடு.! 

Veera Dheera Sooran (Photo Credit: @RameshLaus X)
Veera Dheera Sooran (Photo Credit: @RameshLaus X)

படம் வெளியீடு தேதி உறுதி:

இப்படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் சியான் விக்ரம், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 27, 2025 அன்று திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் எதிர்பார்ப்பு சியான் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இன்று (மார்ச் 20, 2025) படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்றது. டிரைலர் விடியோவை நீங்களும் கண்டு மகிழ, இத்துடன் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் படத்தின் ட்ரைலர் (Veera Dheera Sooran Trailer):

 

வீர தீர சூரன் படத்தின் பாடல்கள் (Veera Dheera Sooran Songs Jukebox):

 

வீர தீர சூரன் இசை & ட்ரைலர் வெளியீடு நேரலை (Veera Dheera Sooran Audio Trailer Launch):

 

படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ட்ரைலர் வீடியோ: