
மார்ச் 19, திருவனந்தபுரம் (Cinema News): முரளி கோபி வசனம் & எழுத்தில், பிரித்வி சுகுமாரன் இயக்கத்தில், ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் எல்2இ எம்பூரான் (L2E: Empuraan). ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீகோகுலம் சினிமாஸ், லைகா ப்ரொடெக்சன்ஸ் (Lyca Productions) ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் இப்படம், கடந்த 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, எம்புரான் (Empuraan) தயாராகி இருக்கிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில், அகிலேஷ் மோகன் எடிட்டிங்கில், தீபக் தேவ் இசையில் படம் உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பரிதாபத், சிம்லா, லே, அமெரிக்கா, ஐரோப்பா, சென்னை, குஜராத், ஹைதராபாத், அமீரகம், மும்பை, கேரளா என பல இடங்களில் நடைபெற்றது. Courage the Cowardly Dog: 90 கிட்ஸ்-களே நினைவிருக்கா? கார்டூன் டிவியின் 'கரேஜ்' எழுத்தாளர் மரணம்; புற்றுநோயால் சோகம்.!
நாளை ட்ரைலர் வெளியீடு:
உலகளவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் திரைப்படம், 27 மார்ச் 2025 அன்று அதிகாரப்பூர்வமாக திரைக்கு வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன படம், தற்போது வெளியாகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் (Mohanlal), பிரித்வி சுகுமாரன் (Pritviraj Sukumaran), கார்த்திகேயா தேவ், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியார், கிஷோர், சாய்குமார், மணி குட்டன், ஐஸ்வர்யா ஓஜா உட்பட பலரும் நடித்துள்ளனர். மலையாள திரை ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் எம்புரான், அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்தவை ஆகும். இப்படம் மொத்தமாக 3 மணிநேரம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் எம்புரான் ட்ரைலர் (Empuraan Trailer) நாளை (20 மார்ச் 2025) அன்று, மதியம் 01:08 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் ட்ரைலர் வெளியாகிறது.