Dhanush's Idly Kadai (Photo Credit: @letscinema X)

மார்ச் 22, சென்னை (Cinema News): தனுஷின் ஒண்டர்பார் பிக்சர்ஸ், டான் பிக்ஸஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை, நடிகர் தனுஷ் நடித்து தயாரித்து வழங்குகிறார். இட்லி கடை என்ற படத்தை இயக்கி வந்த தனுஷ், அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் தனுஷ், நித்யா மேனன் ஆகியோர் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்னர் இணைந்து இருக்கின்றனர். படம் 10 ஏப்ரல் 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. Dinosaur Footprints: 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டயனோசரின் காலடித்தடங்கள்; பள்ளி வளாகத்தில் இருந்த பாறையில் கண்டெடுப்பு.! 

படத்தின் வெளியீடு தள்ளிச்செல்கிறது:

இந்நிலையில், இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன், படத்தின் வெளியீடு தள்ளிப்போவதை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், "நடிகர்கள் நித்யாமேனன், பார்த்தீபன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண் ஆகியோர் ஒரே காட்சியில் இணைந்து நடிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகளை படம்பிடிக்க நேரம் அமையவில்லை. இதனால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால், படத்தின் வெளியீடு தள்ளிச்செல்கிறது. படம் சிறப்பாக வந்துள்ளதால், இறுதி காட்சியையும் படம்பிடித்து வெளியிட முடிவு செய்துள்ளோம். அதனால் தாமதம் ஆகிறது. அருமையான படைப்பை மக்களுக்கு தரத்துடன் வழங்க நினைப்பதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. 10 நாட்களுக்குள் மறுவெளியீடு தேதி அறிவிக்கப்படும்" என கூறினார்.

இந்த தகவல் அருண் விஜய், தனுஷ் ரசிகர்கள் இடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகளவில் வெளியாகிறது.