Dinosaurs Footprint in Australia School (Photo Credit: @tandfnewsroom X)

மார்ச் 22, குயின்ஸ்லேண்ட் (World News): சர்வதேச அளவில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள், படிமங்கள் போன்றவை கண்டறியப்பட்டு வருகின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை நடத்தி வந்த டயனோசர்ஸ் (Dinosaurs) தொடர்பான தகவல்கள் வெளிவருகின்றன. பல இடங்களில் டயனோசர்ஸ் வாழ்ந்த படிமங்களும் கண்டறியப்படுகின்றன. இந்நிலையில், ஆஷிரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், டயனோசர்கள் வாழ்ந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆண்டனி ரொமிலா (University of Queensland Paleontologist Anthony Romilio) உறுதி செய்துள்ளார். Google Doodle for IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்; கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.! 

பாறையில் கால் தடயங்கள்:

ஜுராசிக் காலகட்டம் என ஆய்வாளர்களால் வருணிக்கப்படும் டயனோசர்கள் காலத்தில் வாழ்ந்த, சுமார் 66 க்கும் மேற்பட்ட டயனோசர்களின் கால் தடங்கள் ஒரே இடத்தில் பாறை வடிவில் படிமமாக மீட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அதிக அளவிலான டயனோசர் படிமங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான ஆராய்ச்சிகளும், அங்குள்ள ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றுப்படுகையை ஒட்டி இருந்த இடங்களிலும் ஆய்வாளர்களால் டயனோசர் படிமங்கள் மீட்கப்பட்டுள்ளன. குயீன்ஸ்லாந்தில் உலா பிலேயோ மாநில உயர்நிலைப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ள டயனோசர் படிமங்கள், 2002 க்கு பின்னர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டயனோசர் படிமங்கள் கண்டறியப்பட்டது தொடர்பாக ஆராய்ச்சியாளர் பேசியது: