Actor Govinda (Photo Credit: @TimesNow X)

அக்டோபர் 01, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கோவிந்தா (Govinda). இவர் ஹிந்தியில் 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர், பாடகர், காமெடியன், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர், 12 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடன கலைஞராகவும் அறியப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகரான ஆரூண், நடிகை நிர்மலா தேவியின் மகனான கோவிந்தா, மிகப்பெரிய அளவில் ஹிந்தியில் பிரபலமான நடிகர் ஆவார். Director Perarasu: "அம்மா உணவகம் போல, ஏழைகள் திரையரங்கம்" - உதயநிதி ஸ்டாலினுக்கு, இயக்குனர் பேரரசு கோரிக்கை.! 

வறுதலாக காலில் பாய்ந்த குண்டு:

இந்நிலையில், இன்று தனது வீட்டில் இருந்தவர், எதிர்பாராத விதமாக தன்னைத்தானே முட்டியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நலத்துடன் இருக்கிறார்:

முதற்கட்ட விசாரணையில், கொல்கத்தாவுக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்த நடிகர் கோவிந்தா, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து வைக்க முயன்றபோது, தவறுதலாக அது சுடப்பட்டுள்ளது. இதனால் அவர் முட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில், விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் அவரின் மூட்டு பகுதியில் இருந்த துப்பாக்கி தோட்டாவை வெளியே எடுத்துள்ளனர். தற்போது அவர் உடல்நலத்துடன் இருக்கிறார் என தெரிவிக்கின்றனர். இந்த தகவல் அவரின் ரசிகர்களுக்கும், திரைஉலகினருக்கும் கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

துப்பாக்கிகளை உரிமம் பெற்று வைத்திருந்தாலும், அதனை கவனமாக கையாளத் தவறினால் எந்த மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.