
ஜூன் 05, சென்னை (Cinema News): மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தக் லைப் (Thug Life). இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல், மெட்ராஸ் டால்கிஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு நாயகன் திரைப்படத்துக்கு பின்னர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணி சேர்ந்துள்ளது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்த மழை' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மறுபுறம், கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், தக் லைப் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரை விமர்சனத்தை இப்பதிவில் பார்ப்போம். Kamal Hassan: கமலுக்கு பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தக் லைப் படத்தின் கதை:
இப்படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கராக கமல்ஹாசன், அவருடைய அண்ணன் மாணிக்கம் நாசர் டெல்லியில் கேங்ஸ்டர்களாக இருந்து வருகின்றனர். அப்போது, அங்கு ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில், தந்தையை இழந்த சிம்புவை கமல் தத்தெடுத்து வளர்கிறார். சக்திவேலுக்கு மனைவியாக அபிராமியும், இந்திராணியாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்நிலையில், கமலை ஒரு கூட்டமே கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இந்த சதி திட்டத்தில் இருந்து கமல் தப்பித்தாரா? அனைவரையும் எப்படி பழிவாங்கினார் என்பதே தக் லைப் படத்தின் கதை.
தக் லைப் விமர்சனம்:
படத்தின் முதல் பகுதி சிறப்பாக இருந்தது. குறிப்பாக, இளம் வயது கமலை காட்டிய காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. சிம்புவிற்கும் கமலுக்கும் உள்ள உறவு நன்றாக இருந்தது. கமலின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். த்ரிஷாவும் அவரது கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கமல்ஹாசன், சிம்பு மற்றும் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பல இடங்களில் பலம் சேர்க்கிறது. இருப்பினும், 35 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கமல் - மணிரத்னம் கூட்டணி இப்படத்தை சொதப்பியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது. ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.