
ஜூன் 04, சென்னை (Cinema News): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் தக் லைஃப் திரைப்படம் :
அண்மையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்ட நிலையில், பட பிரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. இதனை தொடர்ந்து நாளை தக் லைஃப் திரைப்படம் உலகெங்கும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Kamal Hassan: கன்னட மொழி சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய கமல்.. பரபரப்பு அறிவிப்பு.!
சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி :
அதன்படி, காலை 9 மணிக்கு முதல் காட்சி சிறப்பு காட்சியாக திரையிடப்படும். அதனை தொடர்ந்து வழக்கம்போல 4 காட்சிகள் என நாளை 5 காட்சிகள் மொத்தமாக திரையிடப்படும். கர்நாடக மாநிலத்தில் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படாது. பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.
தக் லைஃப் சிறப்பு காட்சி தொடர்பான அறிவிப்பு :
#ThugLife 9am special show TN government order issued! pic.twitter.com/YBEvkeOb7R
— Sreedhar Pillai (@sri50) June 4, 2025