
ஜூன் 06, தைவான் (World News): சர்வதேச அளவில் முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் இளம் தலைமுறையிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. தங்களது புகைப்படத்தை பகிர்வதற்கும், ட்ரெண்டிங்கான வீடியோ எடுப்பதற்கும் என பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக சிலர் தங்களது உயிரையும் பணையம் வைக்கின்றனர். சிலர் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு பின் காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். Elon Musk Vs Donald Trump: "நன்றி கெட்டவர்" - அமெரிக்க அதிபரை கடுமையாக சாடிய எலான் மஸ்க்.!
மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் வந்த வினையா?
இந்நிலையில் இளம் வயதுடைய இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் உயிரிழந்துள்ளார். தைவான் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளம் இன்ஸ்டா பிரபலம் குவா(Guava Shuishui). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிப்ஸ்டிக், பிளஷ் என பல விஷயங்களை சாப்பிட்டு ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டு வந்தார். இதனிடையே அவர் கடந்த மே 24 அன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உட்கொண்ட ரசாயன பொருட்கள் உடலில் விஷத்தன்மையை ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.