The Paradise Glimpse RAW STATEMENT - Tamil (Photo Credit: YouTube)

மார்ச் 03, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி (Nani Odela). இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடெலாவின் படத்தில் நடித்து வந்தார். இப்படத்திற்கு தி பேரடைஸ் ரா ஸ்டேட்மென்ட் (The Paradise Raw Statement) என பெயர் வைக்கப்பட்டுள்து. எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்து இருக்கிறார். Gangers: சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படம்.. வெளியீடு தேதி அறிவிப்பு.. சிரித்து மகிழ தயாரா ரசிகர்களே? 

கிலிம்ப்ஸ் வீடியோ & வெளியீடு தேதி அறிவிப்பு:

ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், அடிமைப்பட்டு கிடந்த இனத்துக்கு விடுதலை வாங்கி தருவதை போல கிளம்பிஸ் காட்சிகளை கொண்டுள்ளது. இதனால் படம் கேஜிஎப், சலார் போல படங்களின் வரிசையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நானி, சோனாலி குல்கர்னி உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜிகே விஷ்ணு, எடிட்டிங் பணிகளை நவீன் நூலி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். படம் திரையரங்கில் 26 மார்ச் 26 அன்று திரைக்கு வருகிறது.

தி பேரடைஸ் ரா ஸ்டேட்மென்ட் படத்தின் கிளம்பிஸ் வீடியோ - தமிழ் மொழியில்: