
மார்ச் 03, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் சுந்தர் சி (Sundar C). இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. தலைநகரம் படத்தில் வடிவேலு - சுந்தர் சி காமெடி காட்சிகள் இன்று வரை மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. Oscars 2025 Winners: 2025 ஆஸ்கர் விழா; விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ..!
அவினி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பு:
தற்போது இயக்குனர் சுந்தர் சி பேய் படங்களை தொடர்ந்து இயக்கி வழங்கி வருகிறார். அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது. இந்நிலையில், நடிகர் சுந்தர் சி - வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க விருக்கின்றனர். குஷ்பூ சுந்தரின் அவினி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படத்தில், நடிகர்கள் சுந்தர் சி, வடிவேலு, ராமதாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். Surya 45 Shooting: விறுவிறுப்புடன் ராமோஜி பிலிம் சிட்டியில் சூர்யா 45 படப்பிடிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு.!
ரிலீஸ் தேதி அறிவிப்பு:
இப்படம் ஏப்ரல் மாதம் 24, 2025 அன்று திரைக்கு வருகிறது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான குஷ்பூ தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்து, படத்தின் அறிவிப்பு மற்றும் வெளியீடை உறுதி செய்துள்ளார். படத்திற்கு கேங்கர்ஸ் (Gangers) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்துள்ள இருவரும் மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடிப்பார்களா? என எதிர்பார்க்கப்படுகிறது.
கேங்கர்ஸ் படத்தின் போஸ்டர் (Gangers Tamil Movie):
Bow-down to the OG #GANGERS 🥊♥
The #SundarC laugh-riot will shatter the screens from April 24th 🍿#GangersFromApril24 #Vadivelu #AnanditaSundar @AvniCinemax_ @benzzmedia #CatherineTresa @krishnasamy_e @CSathyaOfficial @editorpraveen #Ponraj @Venkatt_Ragavan #MimeGopi… pic.twitter.com/IH1IfIEFjl
— KhushbuSundar () March 3, 2025