Dude (Photo Credit: @PicxelPrakash X)

மே 15, சென்னை (Cinema News): டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan), மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். மூத்த நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரோகிணி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்கிய இப்படத்துக்கு சமீபத்தில் ‘டியூட்' (Dude Movie) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம், 2025 தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. Actor Vijay: ஐசரி கணேஷின் மகள் - மருமகனுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்?.!

'டியூட்' சர்ச்சை:

இந்நிலையில், தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜா, தனது படத்திற்காக 'டியூட்' என்ற தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு அதே தலைப்பில் ஒரு படத்தை அறிவித்ததாக தேஜா கூறினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதே தலைப்பை வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மைத்ரி போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என தெளிவுபடுத்தினார். இதனை, அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். தேஜாவின் 'டியூட்' கால்பந்தை மையமாகக் கொண்டு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 3 தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.