
மே 13, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக நலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என அறிவித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
திருமணத்தில் பங்கேற்காத விஜய் :
திருமணம் மற்றும் திருமண வரவேற்பில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர். கட்சியின் சார்பாக ஆதவ் அர்ஜுனா வந்ததாக தெரியவருகிறது. Actor Rakesh Poojary Dies: திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய நடிகர் மயங்கி விழுந்து மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தயாரிப்பாளரின் மகள் - மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து :
மேலும் திருமண வரவேற்பில் கிட்டத்தட்ட 25,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் விஜய்யும் வந்தால் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தினால் அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐசரி கணேஷின் மகள் - மருமகனுக்கு ஸ்பெஷலாக நடிகர் விஜய் விருந்து வைக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.