ஏப்ரல் 26, பெங்களூர் (Karnataka News): இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் 2024 (General Elections 2024), இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 13 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம்கட்ட இந்திய தேர்தல்கள் 2024 ல் 15.88 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையாற்ற இருக்கின்றனர். 34.8 இலட்சம் புதிய வாக்காளர்களும், 3,28 கோடி இளம் வாக்காளர்களும் இதில் கவனிக்கத்தக்க இடத்தையும் பெற்றுள்ளனர். ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், முதற்கட்டம் ஏப்ரல் 19ல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக நிறைவுபெறுகிறது. Rahul Dravid, Infosys Narayana Murthy Casted Votes: இந்திய தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்..!

நடிகர் பிரகாஷ் ராஜின் (Actor Prakash Raj) அறிவுரை: இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் பெங்களூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையாற்றிய நடிகர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "என் வாக்கு என் உரிமைக்காக நிற்கிறது. என்னை பிரதிநிதித்துவதிப்படுத்தி, முன்னேற்றப்பாதையில் அழைத்துசெல்வபவருக்காக, அவரை தேர்ந்தெடுப்பதற்காக எனது அதிகாரம், நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் ஒலிப்பார்? என்பதை கவனித்து வாக்களிக்க வேண்டும். உங்களின் நம்பிக்கைக்குரிய வேட்பாளரை தேர்வு செய்வது முக்கியம். நான் நம்பிக்கைக்கொள்ளும் வேட்பாளருக்காக வாக்களித்து இருக்கிறேன். நான் கண்ட வெறுப்பு, பிளவுபடுத்தும் அரசியல், அவர்களின் அறிக்கை போன்றவற்றை மாற்ற நான் எனக்கானவருக்காக வாக்களித்து இருக்கிறேன்" என பேசினார்.