பிப்ரவரி 20, சாலிகிராமம்: சென்னை சாலிகிராமத்தில் (Saligramam, Chennai) வசித்து வந்த சிவபக்தர், சமூக சேவகர், நடிகர் மயில்சாமி (Actor Mayilsamy) நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவு (Actor Mayilsamy Passed Away) திரையுலகத்தை மட்டுமல்லாது, அவரால் நன்மை பெற்ற பலரையும் உலுக்கியுள்ளது. சிவபக்தரான அவர் சிவராத்திரி (Maha Shivratri) அன்றே இறைவனடி சேர்ந்தார். தமிழ் திரையுலகத்தை (Tamil Cine Industry) சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களின் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பெங்களூரில் (Bangalore) இருந்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), நேற்று மயில்சாமியின் இறப்பு தொடர்பான தகவல் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்னை (Chennai) விரைந்தார். இன்று சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், "மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23 வயதில் இருந்து எனக்கு தெரியும். மிமிக்கிரி, நகைச்சுவை நடிகராக இருக்கும்போதே அவரை எனக்கு தெரியும். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர், சிவபக்தர். அடிக்கடி நாங்கள் சந்திக்கும்போது சினிமா குறித்து பேசமாட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவன் கோவில் குறித்தே பேசுவார். Naxals ablaze Construction Machines: சாலைகட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு.. வாகனங்களை தீயிட்டு கொளுத்திய நக்சல்கள்..!
நெருங்கிய நண்பர்களாக நாங்கள் இருந்தும், அதிக படங்களில் இணைந்து நடிக்கவில்லை. அது ஏன் என இன்று வரை தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சென்று, அங்குள்ள கூட்டத்தினை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைவார். அங்கிருந்து எனக்கு தொடர்பு கொண்டு பேசுவார். இறுதி முறை நடந்த கார்த்திகை தீபத்திற்கு 3 முறை தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால், நான் படப்பிடிப்பில் இருந்ததால் எனக்கு தெரியவில்லை. நானும் அதை வேலை சூழல் காரணமாக மறந்துவிட்டேன். விவேக், மயில்சாமி ஆகியோரின் இழப்பு திரைத்துறைக்கு மட்டும் இல்லை. இந்த சமூகத்திற்கும் தான். இருவரும் நல்ல சிந்தனைவாதிகள். சமூக அக்கறை கொண்ட மனிதர்கள்.
மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்தது தற்செயல் அல்ல. அவனுடைய கணக்கு, அவனுடைய தீவிர பக்தனை, அவருக்கு உகந்த நாளில் அழைத்துக்கொண்டார். அவரின் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என எனக்கு தெரியவில்லை. அவரின் வாரிசுக்கு திரைத்துறை நல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் தெரிவித்த தகவலின்படி, நான் அவரிடம் பேசிவிட்டு மறைந்த நடிகர் மயில்சாமியின் இறுதி ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன். சிவனுக்கு என் கைகளால் பாலபிஷேகம் நடைபெறும்" என பேசினார்.