Ravi Mohan with Kenishaa (Photo Credit : IndiaTodayFLASH X)

மே 11, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தனது பெயரை "ரவி மோகன்" என மாற்றினார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்தான் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாகவும், இருவரும் சுமூகமாக பேசி இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாடகியுடன் காதலா?

பின்னர் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற நிலையில், இது ஒரு பக்கம் இருக்கவே ரவி மோகன் சமீபகாலமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாடகியை காதலிப்பதால் தான், அவர் மனைவியை பிரிந்ததாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. Thug Life: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

விரைவில் இரண்டாவது திருமணம்? நெட்டிசன்கள் கலாய்:

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் ப்ரீத்தாவின் திருமணத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவி மோகன் ஜோடியாக பங்கேற்றார். இதன் காரணமாக ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது கெனிஷா என்றும் கூறுகின்றனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் கெனிஷாவை, ரவிமோகன் காதலிப்பதாகவும், விரைவில் இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடலாம் என்றும் இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

சர்ச்சை புகைப்படங்கள் :