ஜனவரி 27, சென்னை (Cinema News): கார்த்திக் யோகியின் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம் (Santhanam), மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான்விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி, ஜாக்குலின் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy). இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
டிக்கிலோனா இயக்குனரின் படைப்பு: படத்தின் டீசர் காட்சிகளில் இடம்பெற்றிருந்த வசனம் ஒன்றும் சர்ச்சையை சந்தித்து. இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் கார்த்திக் யோகி (Karthik Yogi) கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா (Dikkilona) என்ற படத்தில் பணியாற்றியிருந்தார். இந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.
நண்பர்களின் சங்கமம் வெற்றிக்கொடி நாட்டுமா? அதனைத்தொடர்ந்து, தற்போது இருவரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சந்தானம், தனது பாலிய நண்பரான ஆர்யா டிடி ரிட்டன்ஸ் (DD Returns 2) படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரித்து வழங்குவதாக தெரிவித்தார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி வழங்குகிறார், படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. AUS Vs WI Test: உயிர்நாடியில் பந்து பட்டும் விடலையே.. காவெமுக்கு நேர்ந்த சோகம்., மின்னல் வேகத்தில் டார்விஸ்; ஆஸி., Vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சம்பவம்.!
ஆர்யா தயாரிக்கும் டிடி ரிட்டன்ஸ் 2: தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம்,"நானும் - ஆர்யாவும் சேர்ந்து கார்த்தி யோகியின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளோம். இப்படம் பாஸ் என்ற பாஸ்கரன் அளவுக்கு வெற்றி பெறும் வகையில், நல்ல கதையம்சத்துடன் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் பணிகளும் தொடங்கும். டிடி ரிட்டன்ஸ் படத்தை ஆர்யா தயாரிக்கிறார். உனக்கு வரும் காமெடியை நீ சிறந்த முறையில் செயல்படுத்தி படத்தை நடித்துக்கொடு என கூறியுள்ளார். அவரின் வார்த்தைகள் எனக்கு போதும்" என கூறினார்.
அரங்கம் அதிர்ந்த சிரிப்புக்கு இன்றும் பற்றாக்குறை: இதன் வாயிலாக நடிகர் சந்தானம் முதலில் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தில் நடிப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆர்யாவும் - சந்தானமும் (Santhanam Arya Combo Movie)இணைந்து மீண்டும் தங்களின் வெற்றிக்கொடியை நாட்டவுள்ளனர். தமிழ் திரையுலகை பொறுத்தமட்டில் சந்தானம் தந்த நகைச்சுவைக்கான இடம் இன்றுவரை வெற்றிடமாகவே இருக்கிறது. பல புதிய நகைச்சுவை நடிகர்கள் தமிழ் திரையுலகுக்கு கிடைத்தும், சந்தானம் தந்த அரங்கம் அதிர்ந்த சிரிப்பு, கைதட்டல் கொண்டாட்டங்களை இன்று வரை யாராலும் தர இயலவில்லை. இனியாவது சந்தானம் அந்த இடத்தினை தக்கவைத்து கதாநாயகனாக தொடருவரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.