Dil Raju Faces IT Raid on 21 January 2025 (Photo Credit: @tollymasti X)

ஜனவரி 21, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு (Dil Raju). இவர் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படங்களை தயாரித்து வழங்கி கவனம் பெற்றார். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் வசனத்தில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்தாவு ஆகிய படங்களை தயாரித்த வழங்கி இருந்தார். இதில் கேம் சேஞ்சர் தோல்வியடைந்த நிலையில், சங்கராந்தி திரைப்படம் மக்களை வரவேற்பை பெற்றது. Tik Tok in US: அதிபராக பொறுப்பேற்றதும் 75 நாட்கள் இறுதி கெடு கொடுத்த ட்ரம்ப்; டிக் டாக்கை வாங்கப்போவது யார்? 

8 இடங்களில் அதிரடி சோதனை:

இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு, அவரின் சகோதரர் ஷிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி மற்றும் உறவினர்கள் என 8 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை (Income Tax Department IT Raid) சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad) நகரில் உள்ள தில் ராஜுவின் வீடு (Dill Raju House), ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரின் உறவினர்கள் வீடு என 8 இடத்தில் சோதனை நடக்கிறது.

55 அதிகாரிகள் குழு முகாம்:

வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதிகாரிகளின் ஆய்வுகள் முடிந்த பின்னரே பிற விபரங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 க்கும் ஏரம்பட்ட இடங்களில் சுமார் 55 அதிகாரிகள் மொத்தமாக சோதனை நடத்தி வருவதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தில் ராஜு வீட்டுக்கு முன்பு அதிகாரிகள் முகாமிட்டுள்ள காட்சிகள்: