ஏப்ரல் 19, வளசரவாக்கம் (Cinema News): உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கவனிக்கப்படும் இந்திய (2024 General Elections) மக்களவை தேர்தல், ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் மாதம் 01ம் தேதி வரை ஏழு கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ல் முதற்கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். 2024 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India), அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளது. Ajith Kumar Casted his Vote: முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய தல அஜித்; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.! 

ஜனநாயக கடமையாற்றிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி (Sivakarthikeyan Casted Vote) தம்பதி: இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியுடன் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு நேரில் வந்து தனது வாக்குகளை காலையிலேயே பதிவு செய்தார். தம்பதிகள் ஜோடியாக வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அச்சமயம் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். வாக்களித்தபின் செய்தியாளர்களை சந்தித்து சில வரிகள் பகிர்ந்துகொண்ட சிவகார்த்திகேயன், "வாக்கு நம் உரிமை, ஓட்டுபோடுவது நம் கடமை. அரைமணிநேரம் செலவிட்டு, மனசாட்சியுடன் வாக்களியுங்கள்" என கூறினார்.

முன்னதாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையாற்றி இருக்கிறார்.