ஏப்ரல் 19, திருவான்மியூர் (Cinema News): 2024 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India), அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கவனிக்கப்படும் இந்தியா தேர்தல்கள் 2024 (2024 General Elections), ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் மாதம் 01ம் தேதி வரை ஏழு கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். Zomato Launches India’s First Large Order Fleet: இனி பார்ட்டிக்கெல்லாம் சோமேட்டோவிலேயே ஆர்டர் பண்ணிக்கலாம்.. அறிமுகமானது சோமேட்டோவின் புதிய திட்டம்..!
காலையிலேயே வாக்கை பதிவு செய்த தல அஜித் குமார் (Ajith Kumar AK): அதன்படி, இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதலாக நடைபெற்றது. வெளியூரில் இருந்து பணியாற்றி வருவோர், சொந்த ஊருக்கு செல்வதற்கு எதுவாக தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சொந்த ஊர் சென்ற பலரு[ம், ஜனநாயக கடமையாற்ற மக்கள் நேரில் வந்து, வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில் இருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில், காலை 7 மணிக்கு முன்னதாகவே நேரில் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அங்கிருந்த ரசிகர்களில் ஒருசிலர் அஜித்துடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு இருந்தனர்.
#Ajithkumar Arrived 20Mins Previously To Poll His Vote ! 🤙🔥
First Man In Kollywood To Do His Democratic Duty ! Proud Of u Thalaaaa ❤️ pic.twitter.com/Wa3rrf2I2K
— Koduva ™ (@KoduvaOffl_) April 19, 2024